தங்கமீனாட்சி இன் தற்குறிப்பு போட்டோ

என் மகள் 3 ஆம் வகுப்பு படிக்கும் போது அவள் உடன் படிக்கும் ஒரு பெண்குழந்தையை அவள் வீட்டின் அருகில் வசிக்கும் ஒரு குடிகார காமுகன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது.

அந்த குழந்தையை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி செப்டிக் டேங்கில் போட்டு விட்டு எல்லோர் கூடையும் சேர்ந்து அவனும் தேடுவது போல் நாடகம் ஆடியது.

ஒரு வாரம் ஆன நிலையில் அந்த குழந்தையின் சடலத்தை போலீசார் மீட்டினார். அதை கண்டு அந்த குழந்தையின் அம்மா கதறியது இன்னும் மனதில் இருந்து நீங்கவில்லை.

குழந்தையின் அம்மா துக்கம் தாளாமல் தூக்கு மாட்டி இறந்துவிட்டார். இந்த நிகழ்வால் வெகு நாட்கள் தூக்கம் வராமல் தவித்தேன்.

அந்த குழந்தையின் முகத்தை குரூப் போட்டோவில் பார்க்கும் போதெல்லாம் என் குழந்தைக்கும் இதே நிகழ்வு நடந்தது போலவே தோன்றும். அந்த குழந்தையின் அம்மாவின் அழுகை சப்த்தம் இன்றும் காதில் ஒளிக்கிறது.

கொலை செய்தவனை பிடித்துவிட்டார்கள். இருந்தும் அவனால் போனது இரண்டு உயிர்கள். இன்றும் என்றும் இந்த கொடுமையான வலியை மறக்க இயலவில்லை.

இந்தக் கேள்விக்கான 21 இதர பதில்களைக் காண்க