புலால் மறுத்தல் அதிகாரம் வள்ளுவரால் எழுதப்பட்டது என்பதை ஏற்பதே கடினமாக உள்ளது. அதற்கு சில காரணங்கள் உண்டு.
- குறளின் மற்ற அதிகாரங்களில் உள்ள பாடல்களின் சுவைக்கும் வார்த்தை பயன்பாட்டுக்கும் இந்த அதிகார பாடல்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை இந்த அதிகாரம் குறளுக்கு பொருந்தமால் இருப்பதை உணர முடிகிறது. இந்த பாடல்களில் ஒருசில பொருட் பிழைகளும் உண்டு. திருக்குறளில் இடைசொருகள் இருப்பதாக வாவுசி கருதுகிறார், நானும் அவ்வாறே. ஆனால் ஆதிகரங்கள் வேறு வேறு.
2. தேவர் குறளும் மூலர் சொல்லும் ஒன்றே என்று கூறும் ஒளவையாரின் நல்வழி பாடலை கொண்டு ஆராய்ந்தால் திருமந்திரம் கெட்ட புலாலை (பொல்லாப் புலால், பாதக மாம்) மட்டுமே கூடாது என்று கூறுகிறது. புலால் என்றாலே கெட்டது என்பதற்கு போதிய ஆதாரம் இந்த பாடல்களில் இல்லை.
3. நான்மறை என்பது உலக வேதங்கள் அனைத்தையும் குறிக்கும் எனவே நான்மறை முடிவும் குறளும் ஒன்றே என்றால் குரான், பைபிள், தோரா, ரிக், யஜூர், சாமம், குறள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், உட்பட பல்வேறு மொழிகளில் உள்ள மறை நூல்களும் ஒன்றுகொன்று முரண்பட முடியாது என்று பொருள். அவ்வாறு இருக்க குறளில் மட்டும் எவ்வாறு புலால் மறுப்பு இருக்க முடியும்?
4. சிவவாகியரும் புலால் மறுப்பு என்ற கருத்து சைவத்தில் இல்லை என்று கூறுகிறார்.
5. புலால் உண்ணாமை என்பது பௌத்தம் போன்ற நாத்தீக சமயங்களில் இருந்து எடுத்து கொள்ளப்பட்டதாக ஒரு கருத்தும் நிலவுகிறது.
6. பிராமண எதிர்ப்பிர்க்காக புலால் மறுப்பை குறளில் வைத்துள்ளார் வள்ளுவர் என்ற கருத்து உண்டு ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை.
எனவே புலால் மறுப்பு அதிகாரத்தை ஆதாரமாக கொண்டு பைபிள் மற்றும் குறளை ஒப்பிடுவதை விமர்சிப்பது பொருந்தாது. மேலும் அவர்களின் அணுகுமுறை சரியா பிழையா என்றுதான் கேள்வி இருக்க வேண்டுமே தவிர, சுய விருப்பு வெறுப்பை பொதுவெளியில் கடுஞ்சொற்களால் வெளிப்படுத்துவது கேட்போரின் பின்புலத்தை கேள்விக்குறியாக்கும். நன்றி.
ப்ரொபைல்-ஐ பின்பற்றுக அறம் கற்க கசடற (Learn Virtues) upvote செய்க
பக்கத்தை பின்பற்றுக அறம் - கற்க கசடற
ப்ளோகை வாசிக்க அறம் கற்க கசடற