ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்பன நிகழும் நிகழ்வின் கால சூழ்நிலை பொருத்துதான் கூறமுடியும்.
ஆனால் மனைவியை அடிக்கலாமா என்றால் கூடாது என்பதுதான் அறம். சரி எல்லை மீறி தவறு செய்யும் மனைவியை அடிக்கவே கூடாதா?
இஸ்லாம்
அபூதுபாப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; பெண்கள் என்ன செய்தாலும் அவர்களைத் தண்டிக்கக் கூடாது என ஆரம்பத்தில் தடை விதித்திருந்தார்கள். அதனால் பெண்கள் ஆண்களை மிகைக்கும் வண்ணம் நடந்து கொண்டார்கள். அப்போது ஆண்கள் மனைவியருக்கு அடிக்கும் அனுமதியைக் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களும் அனுமதியளித்தார்கள். அன்று இரவே பல மனைவியர்கள் தமது கணவர்களினால் தாக்கப்பட்டார்கள். இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் முறையிடப்பட்ட போது அவ்வாறு தாக்கியவர்களைக் கண்டித்ததுடன் அவர்கள் (தாக்கியவர்கள்) நல்லவர்கள் அல்ல என்றும் கூறினார்கள். (அல்முஸ்தத்ரக்)
அவர்களுக்குக் காயம் வராத முறையில் கடுமை இல்லாத விதத்தில் மென்மையாக அடியுங்கள்!’ என நபி(ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)
பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை (மென்மையாக) அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன் 4:34
உங்களில் ஒருவர் தம் மனைவியை அடிமையை அடிப்பதுபோல் அடிக்க முற்படுகிறார். (ஆனால்) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன் (தாம்பத்திய உறவுக்காக படுக்க நேரலாம். (இது முறையா.…) நூல் : புகாரி-4942
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் மனைவிமார்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்ன? தவிர்க்க வேண்டியவை என்ன? என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபியவர்கள் (உமது மனைவி) உமது விளைநிலமாகும். உமது விளைநிலங்களுக்கு நீ விரும்பியவாறு சென்று கொள். (அவளைக் கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதே! அவளை அசிங்கமாகத் திட்டாதே! நீ உண்ணும் போது அவளையும் உண்ணச் செய்! நீ ஆடை அணியும் போது அவளுக்கும் ஆடை கொடு! வீட்டில் வைத்தே தவிர (மற்ற இடங்களில்) அவளிடம் வெறுப்பைக் காட்டாதே. நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் அவர்களின் மீது உங்களுக்கு ஆகுமானவை தவிர மற்ற விஷயங்களில் எப்படி நீங்கள் (அவர்களிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முடியும்?) என்று கூறினார்கள். நூல் : அஹ்மத்
இதற்கு மேலும் கட்டுப்படாத மனைவியை விவாகரத்து செய்யலாம். விவாகரத்து மூன்றுமுறை போதுமான கால இடைவெளியில் செய்யப்படவேண்டும்.
இது போல எல்லை மீரும் கணவனை விவாகரத்து செய்யும் உரிமை பெண்களுக்கும் உண்டு. எனவே அவரவர் பொறுப்புகளுக்கு தகுந்த உரிமையை பெற்று இருப்பது இயல்பு. அந்த உரிமையின் அளவை மீருவதுதான் ஆதிக்கம் ஆகும். அரசு போடும் சட்டங்களுக்கு நாம் ஏன் கட்டுப்பட வெண்டும்? ஏனென்றால் அரசு நம்மை பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டுள்ளது. தாய் தந்தையருக்கு ஏன் கட்டுப்படவெண்டும்? தாய் தந்தையரும் நம்மை பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பில் உள்ளவர்கள். இவர்களுக்கு நாம் கட்டப்படவில்லை என்றால் கண்டிக்கும் உரிமையும், தேவைபட்டால் தண்டிக்கும் உரிமையும் உண்டா? இல்லையா? கணவனும் அப்படித்தானே?
கிறிஸ்தவம்
மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்” (எபேசியர் 5:22-24).
பாவம் உலகத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்பே, கணவனின் தலைமைத்துவத்தின் நியமம் இருந்தது (1 தீமோத்தேயு 2:13).
தமிழர் சமயம்
கல்லார்க்கு இன்னா ஒழுகலும், காழ்க் கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலும், - இம் மூன்றும்
அறியாமையான் வரும் கேடு. [திரிகடுகம் 03]
கல்லார்க்கு இனனாய் ஒழுகலும் காழ்கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும் - இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலுமிம் மூன்றும்
அறியாமை யால்வரும் கேடு. [03]
விளக்கம்: கற்றறியாதவருடன் நட்பாய் இருப்பதும், கற்புடை மனைவியை அடித்தலும், சிற்றறிவினரை தம் வீட்டுள் சேர்ப்பதும் அறியாமையினால் விளைகின்ற கேடுகளாகும்.
ஒழுக்கம் மீறும் மனைவியை அடிப்பதை மறைமுகமாக ஆதரிக்கிறது இந்த பாடல்.
ப்ரொபைல்-ஐ பின்பற்றுக அறம் கற்க கசடற (Learn Virtues)
பக்கத்தை பின்பற்றுக அறம் - கற்க கசடற
ப்ளோகை வாசிக்க அறம் கற்க கசடற