ஒரு வரி விடாமல் அந்த நிகழ்ச்சியில் அவர் என்ன பேசினார் என்று தெரிந்து கொள்வது நல்லது. ஒன்று விடாமல் அப்படியே எழுதியிருக்கேன்.
பிரகதீசுவரர் டெம்பிள் அது ரொம்ப famous ஆ இருக்கு. அதை பார்க்காம போகாதீங்க, அதை கண்டிப்பா பார்க்கனும்னு சொன்னாங்க, அவ்ளோ அழகா இருக்கு, நான் ஏற்கனவே போயிருக்கேன் almost like உதயப்பூர் பேலஸ் மாதிரி பண்ணிருக்காங்க.
பட் அதுக்கு அடுத்த நாள் என்னோட ஷுட்டிங் ஒரு ஹாஸ்பிடலில் இருந்துச்சு. very badly maintained. And நான் பார்த்தத எல்லாம் என் வாயால, I don't think.., சொல்லமுடியாது.
இப்போ ஒரு request to....,
நான் ராட்சசி படத்துல சொல்லிருக்கேன். கௌதம் சொல்லிருக்காங்க.
That, கோவிலுக்கு அவ்ளோ காசு குடுக்குறீங்க, அவ்ளோ செலவு பண்ணுறீங்க, பெயிண்ட் அடிக்கிறீங்க, மெயிண்ட்டெய்ன் பண்ணுறீங்க, கோவில் உண்டியலில் அவ்வளவு காசு போடுறீங்க,
ப்ளீஸ் அதே அளவு காசு பில்டிங்ல போடுங்க, ஸ்கூல்க்கு குடுங்க, ஹாஸ்பிடலுக்கு குடுங்க.
School is as important & ரொம்ப ஒரு மாதிரி ஆகிடுச்சு எனக்கு. Actually நான் அந்த கோவிலுக்கு போகல, அந்த ஹாஸ்பிடல் பார்த்துட்டு அந்த கோவிலுக்கு போகல.
Hospitals are as important
Schools are as important
So, let's donate to them also.
அதே அளவிற்கு மருத்துவமனையும், பள்ளிக்கூடங்களும் முக்கியத்துவம் வாய்ந்தது தான். அதற்கும் நன்கொடை அளிப்போம்.
இது தான் ஜோதிகா அவர்கள் பேசியது. இதை மத ரீதியாக பார்க்காமல், மக்கள் நடந்தது என்ன என்பதை சரியாக தெரிந்து கொள்வது நல்லது.
நம்ம ஐயா திருவள்ளுவர் அவர்கள் சொன்னது போல்,
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
ப்ளீஸ் என்று அவர் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. அரசாங்க மருத்துவமனையும் அரசு பள்ளிகளும் மேம்படுவதால் அவருக்கு என்ன லாபம் கிடைக்க போகுது?
கஷ்டப்பட்ட மக்களுக்காக துடிக்கிற ஒரு உள்ளத்தில் தான் கடவுளே குடியிருப்பார். அந்த மனசுக்குள்ள கடவுளை பார்த்தேன் நானும்.தன்னைப்போல் பிறனை நேசிக்கும் நல்ல மனது அந்த குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமின்றி மருமகளுக்கும் அமையப் பெற்றிருப்பது வியக்கத்தக்கது.
தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுப்பதைவிட என்று சொல்லவில்லை. As important என்று தான் சொல்லியிருக்கிறார். அதே அளவு முக்கியத்துவம் பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுப்போம் என்று கூறியிருக்கிறார்.
அதாவது,
கோவில் = பள்ளிக்கூடம் = மருத்துவமனை.
மொத்தத்தில்,
L.H.S = R.H.S
சாந்தனுவை அவரது மனைவி தாக்கினாரா? என்ற தலைப்பு செய்தியை பார்த்துட்டு உள்ளே போய் நியூஸ் படிச்சா, இண்டெர்வியூல சும்மா தொடையில் தட்டியதை நியூஸா போட்டுருப்பாங்க நம்ம ஆட்கள்.
எல்லாம் ஒரு விளம்பரத்துக்கு தான். அப்படி தான் சமீபகாலமா கோராவிலும் கேள்விகள் இருக்கு.
கோராவில் வர வர வெறுப்புணர்வும், சண்டைகளும் மேலோங்கிட்டு இருக்கு.
ஆரம்பத்தில் தமிழ் கோரா ஒரு குடும்பமாக இருந்தது.
அந்த குடும்பத்தை தான் தேடிட்டு இருக்கேன். கண்டுபிடிச்சா சொல்லுங்க.
இது கிறித்தவர்களுக்கு மட்டும்,
கோபுரத்திற்கு மேல் கோபுரம் கட்டுறோம் எதுக்கு? புறாவும், காக்காவும் கூடு கட்ட தானே?
நாமளும் 50 ஆண்டு நிறைவு விழா கோபுரம், 100 ஆண்டு நிறைவு விழா அசன கோபுரம், கத்திட்ரல் சர்ச்சை விட நம்ம சர்ச் இருபது அடி அதிக உயரம் வச்சி கட்டுவோம்னு கோபுரத்துக்கு மேல கோபுரம் கட்டி எங்க சர்ச் உங்க சர்ச்சை விட உயரம்னு பெருமை பேசுவதற்கு பதிலா மிஷனெரிகள் செய்தது போல, மருத்துவமனைகளையும் பள்ளிக் கூடங்களையும் இன்னும் அதிகம் கட்டலாமே?