கற்பழிப்புக்கு வெவ்வேறு பண்பாட்டில் சில தண்டனைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழர் சமயம்
அகநானூறு 256 இல் ஒரு கற்பழிப்பு சம்பவம் பற்றி பேசப்படுகிறது.
கள்ளூர் என்னும் ஊரில் வாழ்ந்த சிறுமி நல்லவளை ஒருவன் தன் வலிமையைப் பயன்படுத்தி அவள் பெண்மையை நுகர்ந்துவிட்டான். அந்தக் கொடுமைக்காரன் ஊரார் முன்னிலையில் “அவளை எனக்குத் தெரியாது” என்றான். ஊரார் கரியாளர்களை (சாட்சியாளர்களை) வினவினர். அவன் அவளைக் கெடுத்தது உண்மை எனத் தெரியவந்தது. ஊர் மன்றத்தார் அவனது உறவினர்களைக் கூட்டினர். அவர்கள் முன்னிலையில் கொதிக்கும் சுண்ணாம்பு நீற்றை அவன் தலையில் கொட்டினர். அப்போது ஊரே ஆரவாரம் செய்தது.
இஸ்லாம்
கற்பழிப்பாளர் ஹத் தண்டனைக்கு தகுதியானவர் என்பதற்கு அவருக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் இருந்தால் அல்லது அவர் அதை ஒப்புக்கொண்டால் அவர் ஹட் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் என்று அறிஞர்கள் ஒருமனதாக ஒப்புக்கொள்கிறார்கள். (அல்-இஸ்தித்கார், 7/146)
கற்பழிப்புக்கான ஹத் தண்டனை என்பது கல்லால் அடித்து கொலை செய்வது ஆகும்.
இன்றைய இஸ்லாமிய நாடுகளில் ஆணுறுப்பை வெட்டும் தண்டனை கூட உண்டு.
யூதம் / கிறிஸ்தவம்
பெண்ணை வெளி இடங்களில் கண்ட ஒருவன் அவளைப் பலவந்தமாகப் பிடித்துக் கற்பழித்ததாக அறிந்தால், அவனை மட்டும் (கல்லெறிந்து) கொன்றுவிட வேண்டும். (. (உபாகமம் 22:25-27)
இந்து மதம்
பலாத்காரத்திற்கு ஆளான ஒரு பெண் நிரபராதி என்றும், கற்பழிப்பில் ஈடுபடும் ஆணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் - மத்ஸ்யபுராணம் .
- 8.323. பெண்களை கடத்துபவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்..
- 8.352. பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு அல்லது பாலியல் வன்கொடுமைக்கு தூண்டுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், இது போன்ற ஒரு குற்றத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாத அச்சத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
கருட புராணம் : சல்மாலி (सलमाली)
குற்றம்: விபச்சாரத்தில் ஈடுபடுதல், பெண்களை சித்திரவதை செய்தல், கட்டாய பாலுறவு தொடர்பு.
தண்டனை: மக்கள் தங்கள் பிறப்புறுப்பு இடைவெளியில் சூடான திடமான வடிவமான தடி மற்றும் தடிகளால் துளைக்கப்படுகிறார்கள், மேலும் யமாவின் வேலைக்காரர்கள் பாதிக்கப்பட்டவரை பின்னால் அடிக்கிறார்கள்.
சமயங்கள் அனைத்தும் மிகக்கடுமையான தண்டனை முதல் மரண தண்டனை வரை வன்புணர்வு செய்பவர்களுக்கு கொடுக்கிகிறது.
ஆனால் இன்றைய அரசுகள் என்ன செய்கிறது?
கடுமையான தண்டனைகள் இல்லாமல் போனதன் விளைவு என்ன?
ஏன் ஆட்சியாளர்களுக்கு கற்பழிப்பு குற்றவாளிகளை தண்டிக்கவில்லை?
மேலும் வாசிக்க
- பிஜேபி என்றால் பாரதிய ஜல்சா பார்ட்டி என்கிறார்களே, ஏன்? உதாரணம்?
- பாஜக பெண்களுக்கு எதிரான கட்சி என்கிறார்களே, ஆதாரம் தரமுடியுமா?
- கற்பழிப்புக்கு என்ன செய்யலாம்? அவனுக்கே பெண்ணை மணமுடித்து வைக்க வேண்டுமா? அவனை சிறையிலிட்டு சில மாதங்களில் மன்னித்துவிட வேண்டுமா? மன்னிப்புடன் வாழவும் வழிவகை செய்து தர வேண்டுமா? மரண தண்டனை விதிக்க வேண்டுமா? எது நியாயம்? ஏன்?
ப்ரொபைல்-ஐ பின்பற்றுக அறம் கற்க கசடற (Learn Virtues)
பக்கத்தை பின்பற்றுக அறம் - கற்க கசடற
ப்ளோகை வாசிக்க அறம் கற்க கசடற