அறம் - கற்க கசடற க்கான ஐகான்

இஸ்லாம் புதிய மதமா ?

உலகை பொறுத்த வரை இஸ்லாம் கிபி 610 ஆம் ஆண்டு தோன்றியது.

ஆனால் இஸ்லாத்தை பொறுத்த வரை இஸ்லாம் தான் முதல் மனிதனின் மார்க்கம். இஸ்லாம் தான் இறைவன் ஏற்றுக்கொண்ட மார்க்கம்.

இஸ்லாம் தன்னை "சமயம்" என்று அடையாள படுத்தாமல் "தீன்" அதாவது "மார்க்கம்" அதாவது "வாழும் வழிமுறை" என்று அடையாளப்படுத்துகிறது. அதற்கு காரணம் உலகில் தொடக்கம் முதல் இஸ்லாத்துக்கு முன்பு வரை பல்வேறு வேதங்களும் அது சொல்லும் சமயங்களும் மொழிக்கும், இடத்துக்கும், பாரம்பரியத்துக்கும் ஏற்றவாறு வேறுபட்டு வந்துள்ளது. ஆனால் அதன் அற நெறிகள் எல்லாம் பெரும்பாலும் ஒன்றுதான் என்று கூறும் விதமாகவும் அனைத்து சமயங்களின் தொடர்ச்சியாக இஸ்லாம் இருக்கிறது என்றும் தன்னை தானே அடையாள படுத்துகிறது. அனைத்து வேதங்களும் சமயமும் வழங்கப்பட்ட இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் தான் இஸ்லாம் என்று கூறுகிறது.

  • 3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.
  • 2:120. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
  • 3:85. இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
  • 49:17. அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால், உமக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; “நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால் எனக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதாதீர்கள்; எனினும், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் ஈமானின் நேர் வழியில் உங்களைச் சேர்த்ததனால் அல்லாஹ் தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கிறான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

இஸ்லாம் என்றே பெயரில் இந்த மார்க்கம் 610 லிருந்து அடையாள படுத்தப்பட்டு இருக்கலாம் ஆனால் இதுதான் முதல் மனிதனின் மார்க்கம், கால இட மொழி வேறுபாடின்றி அனைவரின் மார்க்கம் ஆகும்.

உயிரை காக்க வேறு நிலத்துக்கு குடிபெயர வேண்டுமா ?

முதலில், ஆரம்பத்தில் இருந்தவர்கள் தான் இஸ்ரேலில் இருக்க வேண்டும் என்றால், யூதர்கள் எகிப்திலிருந்து இஸ்ரேலுக்கு வருவதற்கு முன்பு அங்கு யார் இருந்தார்களோ அவர்களுக்குத்தான் அந்த இடம் சொந்தம். அந்த வகையில் அந்த இடம் காணான் மக்களுடையது (the ancient Canaanites). அவர்கள் தான் பின்னாளில் இஸ்லாத்தை ஏற்று முஸ்லீம் ஆனார்கள் என்ற கருத்தும் உண்டு. இவர்களுக்கும் யூதர்களுக்கும் காணான் மக்கள் தான் மூதாதையர்கள் ஆவார்கள் என்ற கருத்தும் உண்டு. எப்படி பார்த்தாலும் அவர்கள் அந்த இடத்தின் பூர்வ குடிகள். யூதர்களைவிட அல்லது யூதர்களுக்கு இணையான உரிமை உடையவர்கள்.

இரண்டாவது, வரலாற்றில் ஒவ்வொரு முறையும் அந்நிய படையெடுப்பின் பொழுது வெளியேறிய யூதர்களுக்கு இன்று அந்த இடம் சொந்தமாகும் ஆனால் எப்பொழுதும் எதிரிகளை எதிர்த்து சண்டையிட்டு அங்கேயே நிலைத்து இருந்த கூட்டம் இப்பொழுது வேறு நாட்டில் அடைக்கலம் புக வேண்டும். எல்லா அறத்தையும் மீறும் ஒருவனை விடுத்து, பாதிக்கப்படுபவர்களுக்கு ஆலோசனை சொல்லும் இந்த தர்க்கம் என்ன மாதிரியானது?

மூன்றாவது, நமது இடம் ஆக்கிரமிக்கப்பட்டால் நாம் வேறு இடத்துக்கு அடைக்கலம் பெயரவேண்டும் என்பது சரியான தர்க்கம் என்றால் இந்த நாடு வரலாற்றில் பல தேசத்தவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சமீபமாக வெள்ளையர்கள் 200 ஆண்டாக ஆண்டபொழுது நாம வேறு நாட்டுக்கு குடி பெயரவில்லை. சண்டை செஞ்சோம். நிலம் சிறு துண்டோ கைப்பிடி அளவோ அது அவர்களுடையது, புலம்பெயரும் விடயத்திலும் முடிவெடுக்கும் உரிமை அவர்களுடையது.

நான்காவது, அநீதி இழைக்கப்பட்டவன் இஸ்லாமியராக இல்லை என்றாலும் அவரது பிராத்தனை வலிமையானது என்று இஸ்லாம் கூறுகிறது. எனவே அவர்களது பிராத்தனை அவர்களுக்கு நிச்சயம் பதில் தரும் என்று நம்புகிறார்கள்.

  • அல்லாஹ்வின் உதவியில் உறுதியுடன் இருக்கும் இத்தகைய அநீதி இழைக்கப்பட்டோரின் பிரார்த்தனைகளை அல்லாஹ் எவ்வித தடையுமின்றி ஏற்றுக்கொள்கிறான். ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், ஐந்து வகையான துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படுகின்றன. அவற்றில் அநீதி இழைக்கப்பட்டவரின் துஆவும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: பைஹகீ)
  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஆஹிதை (முஸ்லிம் ஆட்சியின் கீழ் வாழும் முஸ்லிமல்லாதவர்) கொல்பவர், நாற்பது ஆண்டுகள் தூரத்தில் இருந்தாலும் உணரப்படும் சொர்க்கத்தின் வாசனையை கூட உணரமாட்டார்." அல்-புகாரி (3166).

ஐந்தாவது, இந்த இடம் யாருடையது என்பது பற்றிய மற்றும் இந்த யுத்தம் பற்றிய தீர்க்கதரிசனங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் யாருக்கு சொந்தம்?

யூதர்கள் பாவிகளா?

ஆம், என்று நாங்கள் கூறவில்லை. அவர்களின் வேதமும் அவர்களின் ஒப்புதல் வாக்குமூலமும் அதை உறுதி படுத்துகிறது.

இந்த யுத்தம் பற்றிய முன்னறிவிப்பு?

சஹீஹ் முஸ்லிமில் (2922), அபு ஹுரைராவின் ஹதீஸிலிருந்து அல்லாஹ்வின் தூதர் ஸல் கூறினார்கள்: “முஸ்லிம்கள் யூதர்களுடன் சண்டையிடும் வரை மற்றும் முஸ்லிம்கள் கொல்லும் வரை நேரம் தொடங்காது. ஒரு யூதர் ஒரு பாறை அல்லது மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளும் வரை, பாறை அல்லது மரம் கூறும்: ஓ முஸ்லீம், அல்லாஹ்வின் அடிமை, எனக்குப் பின்னால் ஒரு யூதர் இருக்கிறார், அவரைக் கொல்லுங்கள். கர்காத் (முட்கள் நிறைந்த மரம்) தவிர, அது யூதர்களின் மரங்களில் ஒன்றாகும்.

இது அந்த யுத்தமா என்று தெரியாது ஆனால் அதன் ஒரு பகுதி என்பதில் ஐயம் இல்லை.

எகிப்து போன்ற இசுலாமிய நாடுகளில் குடியேறலாமே?

போரின் ஆரம்பத்தில், எகிப்தின் அரசாங்கம் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும் வலுக்கட்டாயமாக இடப்பெயர்ச்சிக்கு எதிராகவும் பொதுப் போராட்டங்களுக்கு கூட சுருக்கமாக அழைப்பு விடுத்தது. அதே நேரத்தில் எகிப்து போருக்கு இழுக்கப்படுவதை விரும்பவில்லை.

எகிப்து மட்டுமல்ல வேறு எந்த இஸ்லாமிய நாடுகளும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் இவர்களை ஏற்க்காது. ஈழத்தமிழர்களை இந்தியா ஏற்காதது போல.

ஒருவேளை இவர்களை பாதுக்காக்க கருதினால் அவர்களுக்கு ஆதரவாக யுத்தத்தில் தான் இறங்கும் ஈரான் போல, ஏமன் போல. அது பிராந்திய பதட்டத்தை மட்டுமல்லால் உலக அளவில் பதட்டத்தை ஏற்படுத்தும். பதட்டத்தை மட்டுமல்ல அழிவை ஏற்படுத்தும்.


ப்ரொபைல்-ஐ பின்பற்றுக அறம் கற்க கசடற (Learn Virtues) upvote செய்க

பக்கத்தை பின்பற்றுக அறம் - கற்க கசடற

ப்ளோகை வாசிக்க அறம் கற்க கசடற

கேள்வியைக் காண்க
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ
கேளீர் யாவரும் கேளிர்.
முன்னாள் ஆய்வாளர்
இறைவனை தேடி-இல் படித்தார்
வசிக்கும் இடம்: Chennai1984–தற்போது வரை
606.9ஆ உள்ளடக்கப் பார்வைகள்இந்த மாதம் 36.6ஆ
29 களங்களில் செயல்படுகிறார்
ஏப்ரல் 2022 அன்று சேர்ந்தார்